தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை மீட்டு தந்த அய்யன்காளி பிறந்த தினம் இன்று…!

Default Image

தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை மீட்டு தந்த அய்யன்காளி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி கேரளா மாநிலம் திருவிதாங்கூர் மாகாணத்தில் உள்ள பெருங்காட்டுவிளா எனும் ஊரில் பிறந்தவர் தான் அய்யன்காளி. இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்த கேரள போராளி. இவர் பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்.

ஓய்வில்லாது உழைக்கும் முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இவர் முதல் முறையாக கேரளாவில் நடந்த விவசாய தொழிலாளர் போராட்டம் மூலமாக வெற்றி பெற்று, ஞாயிற்றுக்கிழமை ஓய்வு உள்ளிட்ட சில உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் சாதி பேதமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி அளிக்க கூடிய தென்னிந்தியாவின் முதல் அரசு பள்ளி இவரது போராட்டத்தால் தொடங்கப்பட்டது.

மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி, அரசு வேலைவாய்ப்பு, நிலம், சமூக மரியாதை, கோவில்களில் வழிபாட்டு உரிமை ஆகியவற்றுக்காகவும் இவர் ஏராளமான போராட்டங்களை முன் நின்று நடத்தி உள்ளார். இவர் 1931 ஆம் ஆண்டு காந்தியடிகள் நேரில் சென்று சந்தித்து இவரது போராட்டங்களையும் தொண்டுகளையும் பாராட்டி ஆசி வழங்கியுள்ளார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுத் தந்த போராளி அய்யன்காளி அவர்கள் தனது 78-வது வயதில் 1901 ஆம் ஆண்டு மறைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்