கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த தினம் இன்று …!
கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1880 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியின் தலைநகராகிய பெர்லினில் பிறந்தவர் தான் ஆல்ஃபிரெட் வெஜினர். கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்தவர் இவர். வளிமண்டலம் மற்றும் பூமியின் காலநிலை மாற்றங்களை ஆய்வு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் முதன்முறையாக 1906 ஆம் ஆண்டு இது குறித்த ஆராய்ச்சிக்காக கிரீன்லாந்துக்கு இரண்டு ஆண்டுகள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு நான்கு முறை இவர் இந்த பயணங்களை மேற்கொண்டு கண்டங்களில் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மேலும், தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ் எனும் தனது பிரபலமான கட்டுரையை 1915 இல் வெளியீட்டு கண்டங்கள் ஒரு காலத்தில் இணைந்து இருந்தது என்பது குறித்த விரிவான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார்.
தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு முக்கியமான கோட்பாடுகளை கண்டறிந்த ஆல்ஃபிரெட் வெஜினர், 1930 ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.