இன்று சிக்ஸர் நாயகனுக்கு பிறந்த நாள்
- கிரிக்கெட் நாயகன் யுவராஜ் சிங்கிற்கு இன்று பிறந்த நாள்.
- ரசிகர்கள் சிக்ஸர் நாயகன் என்று அழைக்கப்பட்டவர்.
1981ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சண்டிகரில் யோகராஜ் சிங்கிற்கு மகனாக பிறந்தவர் யுவராஜ் சிங்.கடைசியாக 2012-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். மேலும் 2017-ம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடினார்.இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகள் , 40 டெஸ்ட் போட்டிகள், 20 ஓவர் போட்டிகளில் 58 முறையும் விளையாடி உள்ளார்.2011-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு உலக டி20 கோப்பையில் இங்கிலாந்துடன் மோதியது இந்தியா. 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி தள்ளிய யுவராஜ் 12 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.அன்று முதல் இவரை ரசிகர்கள் சிக்ஸர் நாயகன் என்று அழைத்தனர்.2011 உலக கோப்பைக்கு பிறகு புற்றுநோய் தாக்கத்தால் தற்காலிகமாக அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகினார்.பின்னர் விளையாடிய ஆட்டங்கள் சரியாக அமையவில்லை.பின்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வீரராக யுவராஜ் சிங் இருந்து வருகிறார். இந்த மனிதர் தனது வாழ்வில் பல உச்சங்களையும் சரிவுகளையும் சந்தித்துள்ளார்.இந்த சாதனை மனிதனுக்கு இன்று பிறந்த நாள் …