தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் கே.பாலச்சந்தரின் 91-வது பிறந்தநாள் இன்று!
சினிமாவின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான தாமஸ் ஆல்வா எடிசனின் மாணவனும், முன்னணி இயக்குநருமாகிய மறைந்த கே.பாலசந்தரின் பிறந்த நாள் இன்று.
திருவாரூரில் உள்ள நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடித்தான் என்னும் பகுதியில் பிறந்தவர் தான் கே.பாலசந்தர் கைலாசம் மற்றும் காமாட்சி ஆகியோருக்கு 1930 ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தவர். தனது தாயாருடன் சேர்ந்து சென்னையில் வசித்து வந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்பதாக நாடகங்கள் மற்றும் பாட்டு குறித்த கலையை அறிந்து கொண்ட இவர் மறைந்த நடிகை ஜெயலலிதாவை வைத்து மேஜர் சந்திரகாந்த் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், இவர்தான் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோரை தமிழ் திரை உலகில் அறிமுகப்படுத்தியவர். நாடகத்துறையில் மட்டுமல்லாமல் சினிமா, தொலைக்காட்சி தொடர் என அனைத்திலும் முத்திரைப் பதித்த பாலசந்தர், ரோஜா திரைப்படத்தின் மூலமாக ஏ ஆர் ரகுமானை தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். மேலும், இவர் சினிமாவின் தாயும் தந்தையுமானவர் என போற்றப்படும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் மாணவனாகவும் திகழ்ந்துள்ளார்.
இவர் 7 தேசிய விருதுகளும், 13 பிலிம்பேர் விருதுகளும் பெற்றவர். திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றது மட்டுமல்லாமல், இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். எந்த விருதுகளாலும் கர்வம் கொள்ளாத உயரிய குணம் கொண்ட இவர் இவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.