தமிழர் தலைநிமிர செய்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66-வது பிறந்தநாள் இன்று!

Published by
Rebekal

தமிழர் விடுதலைக்காக போராடி, தன்னலம் துறந்த தமிழீழ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 வது பிறந்த தினமான இன்று அவரது வரலாறுகள் சிலவற்றை அறிவோம். 

1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஜாஃப்னா தீபகற்பத்தில் அவரது பேற்றுக்கு நான்காவது மகனாக பிறந்தவர் பிரபாகரன். சிறுவயது முதலே புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந்துள்ளார். விவரம் அறியக்கூடிய வயதில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடு கட்டப்படுவதை அறிந்த இவர் போராட்டங்கள் மற்றும் தமிழர் எழுச்சி கூட்டங்களில் பங்கேற்க துவங்கியுள்ளார்.

ஆயுதம் ஏந்தி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வீரர்களாகிய சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பகத் சிங் அவர்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஒரு முறை அவர் அல்கெக்ஸ்சாண்டர் மற்றும் நெப்போலியனால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் பின் தனது 18 ஆவது வயதில் இவர் தமிழீழ விடுதலைப்புலிகள்  துவங்கியுள்ளார். கொரில்லா தாக்குதல் எனும் தாக்குதலுக்கு பெயர் பெற்ற இவரது படைகள் யாருக்கும் அஞ்சாததாக நாளடைவில் உருவாகியுள்ளது.

தற்கொலைப்படைகளையும் இந்த இயக்கத்தில் உருவாக்கிய அவர் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் அவருக்கு தொடர்புள்ளது என வழக்கு தொடரப்பட்டது. இவர்களது இந்த தாக்குதலால் அருகிலுள்ள பொதுமக்களும் உயிரிழந்ததால் இவர்கள் படை மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்த ஆரம்பித்து புலிகளின் தலைநகராகிய கிளிநொச்சியை 2009 ஆம் ஆண்டு கைப்பற்றியதுடன், பிரபாகரன் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியது. அனால், அதன் உண்மை தன்மை அறியப்படவில்லை. இவர் 1984இல் மதிவதனி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் இவருக்கு 3 பிள்ளைகளும் பிறந்தது, இவரது போராட்டத்தில் தனது குழந்தைகளையும் இவர் ஒவ்வொரு கட்டத்தில் இழந்தார்.

தனது கொள்கைகளை தனது விடுதலை புலிகள் குழுவிலுள்ள வீரர்களுக்கு கற்றுக்கொடுத்த அவர், தனது கொள்கையிலிருந்து எப்பொழுதாவது தான் மாறினால் தன்னை சுட்டுவிடுமாறும் கூறியுள்ளாராம், அந்தளவுக்கு தனது கொள்கை மற்றும் நாட்டின் மீது அவர் பற்றுகொண்டவராக இருந்துள்ளார். உள்நாட்டிலேயே 26 ஆண்டுகாலமாக நடைபெற்ற போரில் பல்லாயிரக்காணோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின் பிரபாகரன் தமிழீழ போரிலேயே முடிந்தளவு போராடி தனது உயிரை விட்டதாக கூறப்படுகிறது, சிலர் அந்த போரிலிருந்து பிரபாகரன் வெளியேறி வெளிநாடுகளில் மறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். அவரது வாழ்க்கை இரகசியமும் யாரும் முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாததுமாகவே கடந்து சென்றுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

14 minutes ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

1 hour ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

2 hours ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

2 hours ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

3 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

4 hours ago