நடிப்பின் நாயகன் சூர்யாவின் பிறந்த நாள் இன்று..!

Published by
பால முருகன்

நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகருமான சூர்யா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 

சிவகுமார் லட்சுமி தம்பதிக்கு கடந்த 1975- ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர் சூர்யா. இவர். கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் என்பவரதுஇயக்கத்தில்  வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலா  இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார்.   ரசிகர்களுக்கு மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதனை தொடர்ந்து 2002, ஆம் ஆண்டு உன்னை நினைந்து படம், 2003 -ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார். இந்த திரைப்படமும் விமர்சன ரீதியிலும் , வசூல் ரீதியிழும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

51 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான பேரழகன் திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற 52 வது பிலிம்பேர் விருதை வென்றார்.

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது இருவரும் வீட்டின் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் கடந்த  2006- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர்.

2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி, கஜினி ,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். இந்த மூன்று திரைபடம்மும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெளியான வேல் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில்  நடித்தார்.

2009- ஆம் ஆண்டு வெளியான அயன் , ஆதவன், இரண்டு படமுமும் வெற்றியை கொடுத்தது, அதன்பிறகு சிங்கம் திரைப்படதில் மிரட்டலான போலீசாக நடித்து மிகவும் பிரபல மாகிவிட்டார். அதனை தொடர்ந்து 2011, ஆம் ஆண்டு 7ம் அறிவு படத்தில் தனது அசுர நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு  வெளியான மாற்றான், அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிங்கம் 2, அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, பசங்க 2, 24,சிங்கம் , தானா சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம், என்ஜிகே, காப்பான், சூரரைப்போற்று போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது நவராசா என்ற வெப்பத்தொடரில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் இன்று நடிகர் தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago