மோகன்லால் கரம்சந்த் காந்தி அக்டொபர் 2ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தருவதில் காந்தியின் கொள்கைகள், உலகில் வன்முரையால் எதையும் சாதிக்க முடியாது என அகிம்சை முறையில் தன் சுதந்திர போராட்ட கொள்கையை வகித்துக் கொண்டு, தன்னை பின்பற்றுபவர்களை கடைபிடிக்க சொன்னவர்.
இவரின் இந்த அகிம்சை கொள்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்தது. 1920ல் காங்கிரஸ் தலைவரான காந்தி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி தம் அகிம்சை போராட்டத்தை தீவிரப்படுத்தினார். 1930ல் ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்ததை தொடர்ந்து அதை ஏற்க மறுத்து உப்பு சத்தியாகிரகம் நடத்தினார். மேலும் அந்நியர்கள் நமது நாட்டில் விளைந்த பொருட்கள் மீது வரிவிதிப்பதா என இந்த போராட்டத்தை மேற்கொண்டார்.
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக “ஆகஸ்ட் புரட்சி” என அழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தினை தொடங்கிய அவரின் மனஉறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில், காந்தியின் இடைவிடாத போராட்டத்தில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் இந்திய சுதந்திர பிரகடனம் அரங்கேறியது. இவரது இந்த அகிம்சை வழியிலான அர்பணிப்பான போராட்ட முறைகள் தான் அவரை மஹாத்மா என அழைக்க காரணமாயிற்று.
மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் தினமாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…