இன்று சர்வதேச யோகா தினம்…!

Default Image

இன்று சர்வதேச யோகா தினம்.

யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐநா பொதுச்சபையில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில், சர்வதேச யோகா நாளாக ஒரு நாளை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.

இதற்காக அவர், ஜூன் 21-ஆம் நாளை பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல நாடுகள் ஆதரித்தன. இந்நிலையில் 2014-டிசம்பர் 11ஆம் தேதியன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஜூன் 21 ஆம் நாளை பன்னாட்டு யோகா நாளாக அறிவித்து, தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்திய தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமை வகித்து நடத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்