இன்று சர்வதேச “பனிச்சிறுத்தை” தினம்.!
பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் பனிச்சிறுத்தைகளை பாதுகாக்க ஆண்டுதோறும் அக்டோபர் 23ஆம் தேதியான இன்று சர்வதேச பனிச்சிறுத்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய ஆசியாவில் உள்ள உயரமான மலைப்பாறை தொடரில் பெரும்பாலாக காணப்படும் இந்த பனிச்சிறுத்தைகள் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடுவதாலும், பருவநிலை மாற்றத்தாலும்,உணவு இல்லாமையாலும் அழிந்து வருகிறது.
இதனை தடுக்க சர்வதேச பனிச்சிறுத்தை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.மேலும் இந்த தினத்தை வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.