இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் பிறந்த தினம்…!

Default Image

இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த தினம்.

கடந்த 1886 ஆம் ஆண்டு, ஜூலை 30-ம் தேதி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில், நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. தந்தை நாராயணசாமி பிரபல வழக்கறிஞர் ஆவார். தாயார் சங்கரம்மாள் பாடகர் ஆவார். இவருக்கு சுந்தரம்மாள் என்ற சகோதரியும், நல்லமுத்து மற்றும் ராமையா என இரண்டு சகோதரர்கள் இருந்தனர்.

பள்ளி வாழ்க்கை 

அக்காலத்தில் பெண்கள் படிப்பதற்கே வழிவகை இல்லாத காலகட்டத்தில், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற பழமொழியையும் மீறி எதிர்நீச்சல் போட்டு நான்கு வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி தனது பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் பயின்றார்.

கல்லூரி 

முது லெட்சுமி ரெட்டி கல்லூரியில் பயில்வதற்கு இவரது தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார். ஆனால் வெளியூர் கல்லூரிகளில் படிப்பதற்கு பெண்களுக்கு விடுதி வசதிகள் இல்லை. உள்ளூர் பள்ளிகளில் கல்லூரிகளில் பெண்கள் பயில்வதற்கு அனுமதி இல்லை. இந்த சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார்.

அப்போது ஆட்சியில் இருந்த சில பழமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் பெண் கல்வியில் பெரும் ஆர்வமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவர் கல்லூரியில் பயில்வதற்கு அனுமதி வழங்கினார்.

முதல் பெண் மருத்துவர் 

குறிப்பிட்ட காலத்திற்கு பின், அவரது தாயார் சந்திரம்மாள் நோயால் மிகவும் அவதிப்பட்டு இறந்து போனார். இதை நேரில் பார்த்த முத்துலட்சுமி ரெட்டி மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியத்தில் 1907 சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இவர் படிப்பில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல். சிறப்பு சான்றிதழும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார். 1912 ஆம் ஆண்டு முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்றார்.

திருமணம் 

முத்து லெட்சுமி ரெட்டி 1914-ம் ஆண்டு, சுந்தர் ரெட்டி  என்பவரை திருமணம்  செய்தார். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்குதான் சுந்தர் ரெட்டி – முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, ராம் மோகன், கிருஷ்னமூர்த்தி என இரண்டு மகன்கள் இருந்தனர். முத்துலட்சுமி ரெட்டிக்கு அவரது சேவைகளைப் பாராட்டி 1981-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மறைவு 

முத்துலெட்சுமி ரெட்டி 1978-ம் ஆண்டு, ஜூலை மாதம் 22-ஆம் தேதி மண்ணுலகை விட்டு மறைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்