இன்று அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினம்.அதன் வரலாறு,இன்றைய நாளில் பட்டாசு ஏன் முக்கியமானது என்று பார்ப்போம்…
1776-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜுலை 4 ஆம் தேதியில் அமெரிக்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கான பிரகடனமானது தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்பில் உருவானது.
அமெரிக்கா சுதந்திர தின வரலாறு:
கி.பி. 1492 ஆம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.ஆரம்பத்தில் போர்ச்சுகீசியர்களும், ஸ்பானியர்கள் மட்டுமே அமெரிக்காவில் குடியேறினர்.பின்னர்,பிரான்ஸ் ,இங்கிலாந்து, ஹாலந்து, போன்ற நாட்டினரும் அங்கே கால்பதிக்க ஆரம்பித்தனர்.இதனால்,அவர்களுக்குள் மோதல்கள் தொடங்கியது.
அதில் பிரிட்டிஷ் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தொடங்கியது.பின்னர் தனது மக்களை அங்கு குடியமர்த்தி சிறிது சிறிதாக 13 மாகாணங்களாக உருவெடுத்தது.ஆனால்,ஒரு கட்டத்தில் 13 மாகாணங்களில் உள்ள சொந்த நாட்டு மக்களே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக திரும்பினர்.அப்போதுதான் அமெரிக்க ஐக்கிய நாடாக அவை மாறியது.
பின்னர்,அமெரிக்கா பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது.இதனால், 1775 ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி கடுமையான போர் தொடங்கியது.அப்போது,அமெரிக்க போர்ப்படைத் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்க்டன் நியமிக்கப்பட்டார்.ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு தோல்விகளை சந்தித்தாலும்,இறுதியில் ஜார்ஜ் வாஷிங்டன் வெற்றியைப் பதிவு செய்தார்.
இதனையடுத்து,1776 ஜூலை 2 ஆம் தேதி, 13 அமெரிக்க மாகாணங்களில்,12 மாகாணங்கள் கிரேட் பிரிட்டனில் இருந்து பிரிந்து, கான்டினென்டல் காங்கிரஸின் வாக்களிப்பின் மூலம் சுதந்திரத்திற்கான கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்தது.
மனுவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, 13 அமெரிக்க மாகாணங்களும் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்க வாக்களித்து,பிரிட்டிஷ் ஆட்சிக்கு விடை கொடுத்தன.
1776- ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் தாமஸ் ஜெஃபர்சன் என்பவரின் பெரும் பங்களிப்புடன் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனம் வாசிக்கப்பட்டு,காங்கிரஸ் தீர்மானம் நிறைவேறியது.
அன்றிலிருந்து,ஒவ்வொரு வருடமும் ஜுலை 4-ந்தேதியில் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜூலை 4 ஆம் தேதி பட்டாசு ஏன் முக்கியமானது?
1777 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பிலடெல்பியா நகரில் தான் முதன்முதலில் பட்டாசு வெடிக்கும் பாரம்பரியம் தொடங்கியது.மேலும் சுதந்திர தினத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கொண்டாட்டத்தினை நினைவுபடுத்தும் விதமாக காலையிலும் மாலையிலும் 13 குண்டு முழங்க துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.
எவ்வாறாயினும்,1776 ஜூலை 4 ஆம் தேதி சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், அமெரிக்காவின் ஸ்தாபன தந்தையர்களில் ஒருவரான ஜான் ஆடம்ஸ், சுதந்திர தின விழாக்களில் ஒரு பகுதியாக பட்டாசுகளை கற்பனை செய்திருந்தார் என்பதைக் கவனத்தில் கொண்டு,ஜூலை நான்காம் தேதியை, அமெரிக்கர்கள் பெரும் பட்டாசு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடும் ஒரு சடங்காக மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…