சார்லஸ் ராபர்ட் டார்வின் என்ற அறிஞர் மறைந்த தினம் இன்று.
சார்லஸ் ராபர்ட் டார்வின் இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.
இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, ‘தக்கன பிழைக்கும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.
மதுரை : உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக…
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக காலமானார். மறைந்த நடிகர் டெல்லி கணேஷின்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன்…
சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு ராமாபுரத்தில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு தொடங்கும், 9.30…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி காரணமாக, இன்று குறைந்த காற்றழுத்த…
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக காலமானார். 80 வயதான அவர் 40…