கார்ல் மார்க்ஸ், ஐரோப்பா கண்டத்தின் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் என்னும் நகரில் 1818 மே மாதம் 5ஆம் நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர் ஆவர். கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாவார். 1830 வரை இவருக்கு தனிப்பட்ட முறையில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.
பின், 1841-இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே அவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை மனதிற்குள் வைத்திருந்த மார்க்ஸ், ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.
காரல் மார்க்ஸ் அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் இன்றளவும் கருதப்படுகிறார். இத்தகைய பொதுவுடைமையில் பொக்கிஷமாக திகழ்ந்த இவர், மார்ச் மாதம் 14ஆம் நாள் 1883ஆம் ஆண்டு தனது 64வது அகவையில்
இவ்வுலகை விட்டு மறைந்தார். இவர் இவ்வுலகை விட்டு மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…