வரலாற்றில் இன்று(14.03.2022)..!பொதுவுடைமை சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் மறைந்த தினம் இன்று..!

Default Image

கார்ல் மார்க்ஸ், ஐரோப்பா கண்டத்தின்  ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் என்னும் நகரில் 1818 மே மாதம் 5ஆம் நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர் ஆவர். கார்ல் மார்க்ஸ் இவருக்கு மூன்றாவது மகனாவார். 1830 வரை இவருக்கு தனிப்பட்ட முறையில் தான் கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார்.  கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

பின், 1841-இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் என்ற  இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே அவர் பிரான்ஸ் தலைநகர்  பாரிஸ் சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை மனதிற்குள் வைத்திருந்த மார்க்ஸ், ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.

காரல் மார்க்ஸ்  அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராக இவர் அறியப்படுகிறார். பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் இன்றளவும் கருதப்படுகிறார். இத்தகைய பொதுவுடைமையில் பொக்கிஷமாக திகழ்ந்த இவர், மார்ச் மாதம் 14ஆம் நாள் 1883ஆம் ஆண்டு தனது  64வது அகவையில்
இவ்வுலகை விட்டு மறைந்தார். இவர் இவ்வுலகை விட்டு மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
rohit sharma Anjum Chopra
Mamata Banerjee Yogi Adityanath
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat