பிறப்பு மற்றும் இளமை:
தாமஸ் ஆல்வ எடிசன் பிப்ரவரிமாதம் 11ஆம் நாள் 1847ஆம் ஆண்டு ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பெற்றோர்கள் நடுத்தர வகுப்பை சார்ந்தவர்கள். இவரது தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர், இவரது தாயார் நான்சி எடிசன் இவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது. இவருக்கு இவரது தாயே தொடக்க கல்வியை அளித்தார். பின் மேற்படிப்புகளை மேற்கொண்டு சிறந்த கண்டுபிடிப்பாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிக கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்:
இவர் பிற்காலத்தில், சிறந்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் உருமாறி, இவர் மின் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி, தந்திகருவி, மின் மோட்டார், கிராம போன், நகரும் படங்கள், இன்று நாம் அனைவரும் இருக்கும் கட்டிடங்களுக்கு காங்கிரீட் முறையையும் இவரே கண்டுபிடித்தார். மேலும் கட்டிடங்களின் உட்புறமாக மின் இனைப்பு கொடுத்த முதல் அறிஞரும் இவரே. உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். 1880 ல் இவர் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கினார். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் இதழானது. தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மறைவு:
பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரரான எடிசன் தன் 84வது வயதில்,அதாவது 1931 அக்டோபர் 18 ஆம் நாள் நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் இந்த உலகை விட்டு மறைந்தார். இவரது இறுதிச்சடங்கில், அமெரிக்க அதிபர், ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். தற்போது வரை இந்த நாளில் மின்விளக்குகள் அனைக்கப்பட்டு இவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…