வரலாற்றில் இன்று (20.06.2020).! உலக அகதிகள் தினம்.! ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம்.!
உலக புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் 39 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
உலக அகதிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஐநாவில் ஜூன் 20ஆம் தேதி அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னரே ஆப்பிரிக்காவில் ஜூன் 20ஆம் தேதி அகதிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், அதனை கருத்தில் கொண்டு உலகம் முழுக்க இன்று அகதிகள் தினமாக ஐநா அறிவித்தது.
இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்சே, தமிழ் கானா பாடகர் கானா பாலா மற்றும் தென்னிந்திய நடிகை நீது சந்திரா ஆகியோர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.