ஜனவரி மாதம் 4ம் தேதி 1643, இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று. 1643 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.பின் அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட இவர், மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
ஆப்பிள் மரத்தில் இருந்த ஆப்பிள் பழம் தரையை நோக்கி விழுவதற்கான காரணத்தை அறிய இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவே ,புகழ்பெற்ற நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி தோன்ற காரணமாக அமைந்தது. நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், இயக்க விதிகள், நியூட்டன் வண்ணத்தகடு, நிறப்பிரிகை, நிலைம விதிகள்மற்றும் அவரது கணித நூல்கள் போன்றவை நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவற்றில் மிகவும் முக்கியமானதாக சொல்லப்படும்,அண்டத்தின் பொது ஈர்ப்பியல் விதி மிகவும் முக்கியமானது இதில், F=GMm/R x R , இந்த சமன்பாடு இயற்பியியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தின, இதே போல் சார்பியக்கம் குறித்த இவரது கருத்துகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
மனித குல வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவரை போற்றும் விதமாக நியூட்டனின் மறைவுக்கு பிறகு அவரது கல்லறையில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் என பொறிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…