வரலாற்றில் இன்று(04.01.2020)… இயற்பியலின் தந்தை பிறந்த தினம்..

Default Image
  • அறிவியல் அறிவு வளர காரணமான அறிஞரின் பிறந்த நாள் இன்று.
  • இவரின் அடித்தளத்தை வைத்து இயங்கும் இயற்பியலை நினைவில் வைத்து போற்றுவோம்.

ஜனவரி மாதம்  4ம் தேதி  1643, இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று. 1643 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.பின்  அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட இவர், மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமான  கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

ஆப்பிள் மரத்தில் இருந்த ஆப்பிள் பழம் தரையை நோக்கி விழுவதற்கான காரணத்தை அறிய இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவே ,புகழ்பெற்ற நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி தோன்ற காரணமாக அமைந்தது. நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், இயக்க விதிகள், நியூட்டன் வண்ணத்தகடு, நிறப்பிரிகை, நிலைம விதிகள்மற்றும் அவரது கணித நூல்கள் போன்றவை நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Image result for newton

இவற்றில் மிகவும் முக்கியமானதாக சொல்லப்படும்,அண்டத்தின் பொது ஈர்ப்பியல் விதி மிகவும் முக்கியமானது இதில், F=GMm/R x R , இந்த சமன்பாடு இயற்பியியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தின, இதே போல் சார்பியக்கம் குறித்த இவரது கருத்துகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

மனித குல வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவரை போற்றும் விதமாக நியூட்டனின் மறைவுக்கு பிறகு அவரது கல்லறையில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் என பொறிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்