வரலாற்றில் இன்று(23.06.2020).! தமிழ் செம்மொழி மாநாடு.! உலக கைம்பெண்கள் நாள்.!
வரலாற்றில் இன்று 23.06.2020…
2010ஆம் வருடம் இதே நாளில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமாக அப்போதைய முதல்வர் மறைந்த மு.கருணாநிதி அவர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த செம்மொழி மாநாடு ஜூன் 23,2010 தொடங்கி ஜூன் 27,2010 வரையில் நடைபெற்றது.
அதேபோல, ஜூன் 23-ம் தேதி உலக பன்னாட்டு கைம்பெண்கள் (விதவைகள்) நாளாக அனுசரிக்கப்படுகிறது. கணவன்மார்களை இழந்து தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இன்றைய தினம் உலக விதவைகள் நாளாக அதாவது பன்னாட்டு கைம்பெண்கள் நாளாக ஐநா சபை அறிவித்தது.
கணவர்களை இழந்து பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கைம்பெண்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கான தீர்வுக்கு வழி வகுக்கும் நாளாக இன்றைய நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த தீர்மானமானது ஐநா பொதுச்சபையில் கடந்த 2010ஆம் வருடம் டிசம்பர் 23ம் தேதி நிறைவேறியது.