வரலாற்றில் இன்று (21.06.2020).! சர்வதேச யோகா தினம்.!
2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று உலக யோகா தினம். கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச் சபையில் ஜூன் 22ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க கோரி பரிந்துரை செய்திருந்தார்.
இந்த பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் ஆதரித்தன. இதனை தொடர்ந்து அதே வருடம் டிசம்பர் மாதம் 16ம் தேதியன்று ஐநா சபை ஜூன் 21ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல ஜூன் 21 வரும் தேதியை உலக தந்தையர் தினமாக எகிப்து, ஜோர்டான், சைரியா, உகாண்டா, லெபனான் ஆகிய நாடுகள் கொண்டாடி வருகின்றனர். மேலும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக இந்தியா, அமெரிக்கா, ஜிம்பாவே, வெனிசுலா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.