வரலாற்றில் இன்று(17,03,2020)… இறகு பந்து வீராங்கனை சாய்னா நோவல் பிறந்த தினம்…
அரியானா மாநிலம் இசாரில் சாய்னா நேவால் மார்ச் மாதம் 17ஆம் நாள் 1990 அன்று பிறந்தவர்.பிறந்த சாய்னா, தனது வாழ்வில் அதிகம் ஐதராபாத்திலேயே வாழ்ந்திருக்கின்றார். அவரது தந்தை முனைவர் அர்வீர் சிங் எண்ணெய்வித்துக்கள் ஆய்வு இயக்ககத்தில் அறிவியலாளராகப் பணிபுரிகிறார். அவரது தந்தையும் அன்னை உசா நெவால் இருவரும் முன்னாள் இறகுப்பந்தாட்ட வீரர்கள் ஆவர். இவரது அயராத உழைப்பின் காரணமாக 2004ஆம் ஆண்டு பிபிசிஎல் (BPCL) நிறுவனம் இவரை பணிக்கு அமர்த்தியது.
இவரின் சாதனைகள்:
- ஒரு இந்திய பெண் இறகுப்பந்தாட்ட வீராங்கனை.
- இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலக தரவரிசையில் முதலாவதாக இருந்தவர்.
- பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலக தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும் இவரே.
- 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தவர். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.
- இறகுப்பந்தாட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர்.
- உலக இளையர் இறகுப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண்.
- சிறப்பு தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் உலக அளவில் சாய்னா நேவால் முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு பெற்றார்
பெற்ற விருதுகள்:
- 2009-இல் இந்திய அரசின் அருச்சுனா விருது
- 2010-இல் இந்திய அரசின் தாமரை திரு விருது
- ஆகஸ்ட் 2010-இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
- 2012 நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.