வரலாற்றில் இன்று(20.01.2020).. அறிவியல் அறிஞர் ஆம்பியரின் பிறந்தநாள் இன்று..
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- மின்னோட்ட அறிஞரான ஆம்பியரின் பிறந்த நாள் இன்று.
- இந்நாளில் இவரை நினைவு கூறுவோம்.
மின்னோட்டத்தை அளக்கும் முறையை உலகிற்க்கு உணர்த்திய அறிஞர் ஆம்பியர் ஜனவரி மாதம் 20ம் நாள் 1775ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியோனில் பிறந்தார்.இவரது சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் சிறப்பாக கற்றுக் கொடுத்தார் பின் இவருக்கு . கணிதத்தில் மீதான நாட்டத்தினால், பின்னாளில் இவர், லியோனார்டு ஆய்லர், பெர்னோலி போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்து கற்றார். இந்த படிப்பினை பிற்காலத்தில் ஆம்பியர் கணிதத்தில் மட்டுமன்றி வரலாறு, பயணங்கள், கவிதை, மெய்யியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். மேலும், இவர் மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்தியதற்காக அறிவியலாளர்களால் அறியப்படுகிறார்.
பின் அங்கு ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியின் போது ஆம்பியரின் தந்தையை புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். இது ஆம்பியர் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின் 1796இல் லியோனில் அண்மையில் வசித்த வந்த கொல்லர் குடும்பத்தின் சூலி கேரோனைச் சந்தித்தார். இந்த சந்திப்பு பின்னாளில் காதலாக மாற, 1799ம் ஆண்டு இவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு, ஆம்பியர் லியோனில் கணிதம், வேதியியல், மொழிகள் மற்றும் இயற்பியல் கற்பிக்கும் பேராசிரியராக வேலை செய்தார். 1803இல் தமது மனைவியின் மரணத்திற்கு பிறகும் இதே வேலையில் நீடித்திருந்தார். இருப்பினும் மனைவியின் இழப்பு அவரை வாழ்நாள் முழுமையும் வாட்டியது. எனவே, மர்சேயில் ஜூன் மாதம் 10ம் நாள் 1836ம் ஆண்டு இந்த உலகை விட்டு உயிரிழந்த ஆம்பியர் பாரிசிலுள்ள சிமெட்டியர் டெ மோன்மார்த்ரெயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025![DMKProtest](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/DMKProtest-.webp)
தலைமை தேர்தல் அதிகாரியாக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு.!
February 19, 2025![Gyanesh Kumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Gyanesh-Kumar.webp)
நகைப்பிரியர்கள் ஷாக்: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! கிராமுக்கு ரூ.8,000 ஆயிரத்தை கடந்தது..
February 19, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-6.webp)
விராட் கோலி பார்மில் இல்லையா? ‘சிங்கம் எப்பவும் சிங்கம் தான்’ பயிற்சியாளர் அதிரடி!
February 19, 2025![virat kohli lion](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/virat-kohli-lion.webp)
திருப்பூரில் கொடூரம்! கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை!
February 19, 2025![CrimeAgainstWomen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/CrimeAgainstWomen-.webp)