பாடல்:
ஓங்கி உலகளந்த உத்தமன் போர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கமும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நே லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தோலோ ரெம்பாவாய்.
பாடல் விளக்கம்:
நெடியோன் திரிவிக்கிரமன் ஆக ஓங்கி வளர்ந்து உலகத்தை அளந்த உத்தமன் திருமாள்! அவன் திருநாமங்களை பாடி நாம், நம் நோன்பு இருந்ததற்கான காரணத்தை கூறி நீராடுவோம்’ அவ்வாறு நீராடினால், தீமையில்லாமல் நாடெல்லாம் மும்மழை பெய்யும்; அதனால் நெற்பயிர் பருத்து வளரும், அந்த பயிர்கள் ஊடே கயல் மீங்கள் துள்ளித்திரியும், அளகிய குவலை மலர்களிலே புள்ளிவண்டுகள் தேனை குடித்து மெய்மறந்து உறங்கும்,மாட்டு தொழுவத்தில் புகுந்து இருந்து அழகிய முலைகளை பற்றி இழுத்தால் தேக்கி வைத்துக்கொள்ள முடியாத அளவிற்க்கு பால் சுரந்து குடங்களை நிறைக்கும் வள்ளலின் இயல்பு வாய்ந்த பெரிய பசுக்கள்! இத்தகைய நீங்காத செல்வம் நிறையும்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…