வரலாற்றில் இன்று(டிசம்பர் 5) -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்

Published by
Venu

அதிமுக தொண்டர்களால் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெ. ஜெயலலிதா.இவர்  கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்ற ஊரில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி   ஜெயராம் -வேதவல்லி ஆகியோரின் மகளாக பிறந்தவர்.தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.இவர் 6 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 140 படங்களில் நடித்தவர். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்  எம். ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிமுகமாகி, பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் அரசியல்வாதிகளில் ஒருவராக  ஜெயலலிதா திகழ்ந்தார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்ற காரணங்களுக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு 2016 டிசம்பர் 5-ஆம் தேதி அன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இன்று அவரது 3-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.
Published by
Venu

Recent Posts

தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவி

தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவி

ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…

6 minutes ago

விஜயகாந்த் தலைமுறைகளைக் கடந்தும் நினைவு கூரப்படுவார்! பிரதமர் மோடி பதிவு!

சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…

49 minutes ago

தனி ஆளாக போராடிய ரிஷப் பண்ட்! சென்னை அணிக்கு இது தான் இலக்கு!

லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…

2 hours ago

திமுக கூட தான் போட்டி…விஜய் 2-வது இடத்திற்கு வருவார்! தமிழிசை பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…

3 hours ago

தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…

4 hours ago

ரோஹித் முதல் பண்ட் வரை..அதிக தொகைக்கு எடுத்து சொதப்பும் 5 வீரர்கள்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…

5 hours ago