வரலாற்றில் இன்று(டிசம்பர் 5) -மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம்

Default Image

அதிமுக தொண்டர்களால் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெ. ஜெயலலிதா.இவர்  கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்ற ஊரில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி   ஜெயராம் -வேதவல்லி ஆகியோரின் மகளாக பிறந்தவர்.தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.இவர் 6 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

 தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 140 படங்களில் நடித்தவர். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்  எம். ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிமுகமாகி, பின்னர் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் அரசியல்வாதிகளில் ஒருவராக  ஜெயலலிதா திகழ்ந்தார். காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு என்ற காரணங்களுக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு 2016 டிசம்பர் 5-ஆம் தேதி அன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இன்று அவரது 3-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்