இன்றைய (30.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்று நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். வெற்றி பெறுவதற்கான ஆர்வம் அதிகமாக காணப்படும். உத்தியோக பணிகளில் உங்களது தனித்திறமை வெளிப்படும். உங்கள் மனைவியுடன் பிடித்த உணவுகளை பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய தினத்தில் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்களது மனைவியுடன் சாதாரணமாக பழகுங்கள். இன்று பணப்பற்றாக்குறை அதிகமாக ஏற்படும். மனஉளைச்சல் காரணமாக இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படும்.

மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமையாதென்பதால் முக்கிய முடிவுகளை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டும். இன்று உத்தியோகத்தில் வளர்ச்சி சற்று குறைந்து காணப்படும். மனம் சஞ்சலமாக இருக்க நேரும். பணவரவு குறைவாக ஏற்படும். கண்களில் பாதிப்பு ஏற்படும்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்களது புத்திசாலித்தனத்தினால் நன்மைகளை அடைவீர்கள். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் திறமையாக செயல்படுவீர்கள். உங்கள் மனைவியிடம் மனம் திறந்து பேசுவீர்கள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

சிம்மம் : இன்று ஆற்றலும் தன்னம்பிக்கையும் நிறைந்து செயல்படுங்கள்.  உத்தியோக வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக அமையாது. சளி தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள். உத்தியோக பணிகளில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் சகஜமாக பழகுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்றைய நாளில் மகிழ்ச்சிகரமாக அமையாதென்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி வைக்க வேண்டும். உத்தியோக பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகமாக ஏற்படும். இன்று தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம் : இன்று வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நாளாக அமையும். உங்கள் செயல்களில் இன்று வெற்றி கிடைக்கும். பணிகள் அதிகம் இருந்தாலும் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் நல்லுறவு ஏற்படும். பணவரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இலட்சியங்கள் நிறைவேறும் நாள். உத்தியோக வேலை முன்னேற்றமாக அமையும். உங்கள் மனைவியிடம் நட்பான அணுகுமுறையில் பேசுவீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோக இடங்களில் கவனக்குறைவாக இருப்பீர்கள். உங்கள் மனதில் ஏற்படும் குழப்பமான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். தோல் தொடர்பான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று நீங்கள் உற்சாகமும் ஆற்றலும் குறைந்து காணப்படுவீர்கள். உத்தியோக வேலை சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் பேசும்பொழுது பொறுமையாக பேசுங்கள். பயணத்தின் போது பண இழப்பு ஏற்படும். தோல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று உங்களுக்கு நற்பலன்கள் அதிகமாக அமையும். உத்தியோக இடங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இன்று பணவரவு சாதகமாக இருப்பதால் சேமிக்க முடியும். இன்று உங்களின் ஆற்றல் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Published by
Sharmi

Recent Posts

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…

16 minutes ago

வெளியானது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்…,

சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…

17 minutes ago

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…

2 hours ago

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…

3 hours ago

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

10 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

12 hours ago