இன்றைய (29.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: உங்கள் ஆசைகள் எளிதில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் காணப்படும். உங்கள் செயல் திறன் மேம்படும். பணியில் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.

ரிஷபம்: உங்கள் செயல்களை பொறுமையுடன் கவனமாக கையாள வேண்டும்.பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள் மூலம் நன்மை விளைவதைக் காண்பீர்கள். இன்று பணியிடத்தில் உற்சாகமான நிலை காணப்படாது.

மிதுனம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் தொடர்புகள் அதிகரிக்கும்.

கடகம் : இன்று எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனம் திறந்து அந்த வாய்ப்புகளை எற்றுக் கொள்ளுங்கள். பணியில் பதட்டம் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். விளைவுகள் உங்களுக்கு திருப்தி அளிக்காது.

சிம்மம்: இன்று சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். உங்கள் மனதில் பணி மாற்றம் குறித்த எண்ணங்கள் எழும்.

கன்னி: இன்று சிறந்த பலன்கள் விளையும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் வளர்ச்சியும் உங்கள வாழ்வில் நன்மையும் விளையும். பணியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

துலாம்:வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் சாதகமான பலன் கிடைக்கும். இதனை உண்மையாக நீங்கள் முயற்சி எடுக்கலாம். பணியிடத்தில் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். 

விருச்சிகம்: இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும். பணியிடத்தில் சிறப்பான பலன்கள் கிடைகாது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாகக் கையாள வேண்டும்.

தனுசு: ஆன்மீக இசையை கேட்பதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகளைக் கையாளும்போது கவனக்குறைவு ஏற்படும். சக பணியாளர்களுடன் மோதுவதை தவிர்க்கவும்.

மகரம்: உங்கள் தேவையின் முன்னுரிமை அறிந்து அதன்படி செயல்படுங்கள். அதிக பொறுப்புகள் காரணமாக மும்மரமாக இருப்பீர்கள்.பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்காது.

கும்பம்: நீங்கள் அமைதியாக இருக்க கேளிக்கை நிகழ்ச்சி களைக் கண்டு மகிழுங்கள். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் செலுத்துங்கள். வேலை தொடர்பான பயணம் காணப்படும்.

மீனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் முடிவுகள் எடுப்பதை கடினமாக உணர்வீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்