இன்றைய (26.11.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம் : இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உத்தியோக பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் உங்களின் அகந்தை குணத்தை காட்டுவீர்கள். இன்று பணவரவு குறைந்து காணப்படும். தோள்களில் வலி ஏற்படும்.
ரிஷபம் : இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோக பணிகள் வளர்ச்சி அடைவீர்கள். உங்களது மனைவியுடன் ஒளிவுமறைவின்றி பேசுவீர்கள். இன்று பணவரவு அதிகமாக ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமையாது. அதனால் பொறுமையுடன் செயல்படுங்கள். இன்று உத்தியோக பணிகளில் கவனம் தேவை. இன்று காதலுக்கு உகந்த நாள். வரவிற்கேற்ற செலவுகளும் அதிகமாக ஏற்படும். கால் வலி ஏற்படும்.
கடகம் : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றியடைய அதிகமாக உழைக்க வேண்டும். இன்று உங்களுடைய உத்தியோக பணிகள் சற்று அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் நட்பு முறையில் இன்று பழகுவீர்கள். தேவைகளுக்காக சிறு அளவு பணம் கடன் வாங்க வாய்ப்புண்டு. இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். காதலுக்கு இன்று ஏற்ற நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். பாதத்தில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
கன்னி : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும். உத்தியோக பணிகள் சற்று அதிகமாக இருந்தாலும் அனைத்தும் குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்றைய நாளில் பணவரவு மிகுந்து காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும்.
துலாம் : இன்று முன்னேற்றமான நாள். உத்தியோக வேலை இன்று சிறப்பாக அமையும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நாளாக அமையும். நிதிநிலைமை சாதமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று பலன்கள் கலந்து இருப்பதால் மனதை அமைதியாக வைத்திருங்கள். பணியின் போது தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் குழப்பத்துடன் இருப்பதால் உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைந்து இருக்கும். பணவரவு குறைவாக ஏற்படும். இன்று சிறிய பதட்டநிலை காணப்படும்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையினால் பயணம் ஏற்படும். உங்கள் மனைவியிடம் அமைதியாக பழகுங்கள். வரவும் செலவும் கலந்து காணப்படும். மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
மகரம் : இன்று உங்களுக்கு லாபமான நாளாக அமையும். உத்தியோக பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் மனதில் ஏற்படும் நம்பிக்கையான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கும்பம் : இன்று உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியும் வெற்றியும் சேர்ந்து அமையும். உத்தியோக வேலையில் வெகுமதி மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று ஆற்றல் மிக்க மனநிலை அமையும்.
மீனம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. மனதை அமைதியாக வைத்திருங்கள். உத்தியோக இடங்களில் திட்டமிட்டு செயல்படுங்கள். நீங்கள் சிறிய விஷயங்களையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். இது உறவின் நல்லுறவை பாதிக்கும். இன்று கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இன்று பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும்.