இன்றைய (24.5.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்: உங்களின் சமயோசித புத்தி மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக இன்று பயனுள்ள பலன்கள் சாத்தியம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
ரிஷபம்: இன்று அவநம்பிக்கையும் அமைதியின்மையும் காணப்படும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்: இன்று மிதமான பலன்களே காணப்படும். இன்று செயல்கள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். சில பணிகள் நிலுவையில் நிற்கும். இன்றைய சவால்களை சந்திக்க சமநிலை போக்கு தேவை.
கடகம் : இன்று இனிமையான நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் செயல்களை எளிதாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்டமான நாள்.
சிம்மம்: இன்று துடிப்பான நாளாக இருக்காது. இன்று பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். இன்று எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கன்னி: இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உங்கள் உடன் பிறந்தவர்களால் தொல்லையும் பிரச்சினைகளும் ஏற்படும்.
துலாம்: இன்று சகஜமாகவும் நகைச்சுவை போக்கும் மேற்கொண்டால் நன்மை ஏற்படும். பிரச்சினைகளை சமாளிக்க இயலும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
விருச்சிகம்: இன்று வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமான நாள்.குறைந்த முயற்சியில் அதிக வெற்றி பெறுவீர்கள். இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். இதனால் நன்மை ஏற்படும்.
தனுசு: இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் இன்று லாபகரமாக இருக்கும்.பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
மகரம்: இன்றைய நாள் சிறந்த பலன் தர சாதகமாக அமையாது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
கும்பம்: இன்று அனுகூலமான நாளாக இருக்காது சில சமயங்களில் நீங்கள் பொறுமையின்றி காணப்படுவீர்கள். நீங்கள் தைரியம் இழக்கும் வகையில் கடினமான சூழ்நிலை காணப்படும்.
மீனம்: இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும்.