இன்றைய (24.12.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம் : இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். ஆன்மீக செலவு செய்ய நேரிடும். கண் சிகிச்சை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படும். இன்று பணவரவு சிறப்பாக இருக்காது. முதுகுவலி ஏற்படலாம்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக பணிகளை செய்வீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையாது. இன்று உத்தியோக இடத்தில் தவறுகள் ஏற்படலாம். துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக காணப்படும். காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்மம் : இன்று உங்கள் அதிக பொறுப்புகளால் கவலை அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்ய முடியாது. உங்கள் மனைவிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்காது. பதட்டம் காரணமாக ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. சில மாற்றங்களை இன்று சந்திப்பீர்கள். உத்தியோக வேலையில் பயணங்கள் காணப்படும். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். தூக்கமின்மை காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
துலாம் : இன்றைய நாள் நீங்கள் யதார்த்தமான அணுகுமுறையில் இருக்க வேண்டும். உத்தியோக இடத்தில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம் : இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமானதாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும். இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். தோள் வலி ஏற்படும்.
மகரம் : இன்று அவசரத்தால் பல வாய்ப்புகளை இழப்பீர்கள். உத்தியோக வேலை சிறப்பாக இருக்காது. உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படும்.
கும்பம் : இன்று சிறப்பான நாளாக அமையும் என்பதால் உங்களது சுய வளர்ச்சிகளை துவங்கலாம். உத்தியோக வேலையில் வளர்ச்சி கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்றைய நாளில் உங்களது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சுமுமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.