இன்றைய (23.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் :  இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் ஈகோ பிரச்சனை ஏற்படலாம். இன்று பண வரவு குறைவாக இருக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கலாம்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலை இன்று திருப்திகரமாக இருக்கும். மனைவியிடம் மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுவீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சற்று மிதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் மனஉளைச்சல் ஏற்படலாம். துணையிடம் உணர்ச்சிவசப்படாதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கலாம்.

கடகம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையாது. இன்று உத்தியோக இடத்தில் தவறுகள் ஏற்படலாம். துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக காணப்படும்.தொண்டை எரிச்சல் மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம் : இன்று உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்ய முடியாது. உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்துக்கொள்ளவும். பணவரவு திருப்திகரமாக இருக்காது. கால் வலி மற்றும் தோல் எரிச்சல் ஏற்படலாம்.

கன்னி : இன்றைய நாளில் உங்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் புகழையும் பெயரையும் சம்பாதிப்பீர்கள். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

துலாம் : இன்றைய நாள் நீங்கள் யதார்த்தமான அணுகுமுறையில் இருக்க வேண்டும். உத்தியோக இடத்தில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் நேர்மறையான அணுகுமுறையில் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று மனஉளைச்சல் காரணமாக ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். தோல் தொடர்பான பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

தனுசு : இன்று நீங்கள் சவால்களை சந்திப்பீர்கள். அதுவும் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும்.  இன்றைய நாளில் பணவரவு ஏற்ற தாழ்வுடன் இருக்கும். குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

மகரம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். உத்தியோக இடங்களில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

கும்பம் : இன்று சிறப்பான நாளாக அமையும் என்பதால் உங்களது சுய வளர்ச்சிகளை துவங்கலாம். உத்தியோக வேலையில் வளர்ச்சி கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்தியோக வேலையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் துணையிடம் உங்களது குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று பண வரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்