இன்றைய (23.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்று நீங்கள் உங்கள் ஆற்றலை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்களது உத்தியோக வேலையில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் மனைவியுடன் வெளியே செல்லும் வாய்ப்பு கிட்டும். தேவையான நேரத்தில் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

ரிஷபம் : இன்றைய தினத்தில் பொறுமையாக செயல்பட வேண்டும். உத்தியோக பணிகளில் இன்று போராட வேண்டியிருக்கும். உங்களது மனைவியுடன் மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு.செலவுகள் வரவை காட்டிலும் அதிகமாக ஏற்படும். உங்களது தாயின் உடல்நிலைக்காக செலவு செய்ய நேரலாம்.

மிதுனம் : இன்றைய தினம் போராட்டம் நிறைந்த நாளாக இருப்பதால் பொறுமையுடன் இருங்கள். இன்று உத்தியோக பணிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. செலவினங்கள் அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக அமையாது. காலில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

கடகம் : இன்று வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷங்களை தள்ளி போடுவது நல்லது. இன்று உங்களுடைய உத்தியோக பணிகள் சாதகமாக அமையும். கடினமான வேலை கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று பண இழப்பு நேர வாய்ப்புண்டு. தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம்.

சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். நீங்கள் சிறு முயற்சியிலேயே வெற்றியை அடைவீர்கள். உத்தியோக வேலையில் உங்களது திறமைக்கு பாராட்டு கிடைக்கும். காதலுக்கு இன்று ஏற்ற நாளாக அமையும். பணவரவு இன்று அதிகரித்து காணப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

கன்னி : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும் என்பதால் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோக பணியில் பொறுமை இன்று உங்களுக்கு தேவை.  உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்றைய நாளில் பணவரவு மிகுந்து காணப்படும். உடற்பயிற்சி மூலமாக ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும்.

துலாம் : இன்று கவனமாக இருப்பது அவசியம். அக்கம் பக்கத்தில் பேசும்பொழுது கவனம் தேவை. உத்தியோக வேலை இன்று சிறப்பாக அமையாது. இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அதிகமாக சிந்திப்பது மூலம் ஆரோக்கியம் கெட வாய்ப்புண்டு.

விருச்சிகம் : இன்று பலன்கள் கலந்து இருப்பதால், பொறுமை மிகவும் அவசியம். பணியில் சிறந்த அணுகுமுறை மூலம் வெற்றி பெறலாம். மனதில் குழப்பத்துடன் இருப்பதால் உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைந்து இருக்கும். பணவரவு குறைவாக ஏற்படும். தொடை மற்றும் கால் வலி பிரச்சனை ஏற்படலாம்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக வேலைகளை குறித்த நேரத்தில் முடித்து உங்களது திறமையை வெளிப்படுத்துவீர்கள். இன்று காதலுக்கு ஏற்ற நாளாக அமையும். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கிய பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது.

மகரம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக அமையும். உத்தியோக பணிகள் சற்று அதிகமாக காணப்படும். உங்கள் மனதில் ஏற்படும் நம்பிக்கையான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். அதிக வேலையால் கால் வலி ஏற்படலாம்.

கும்பம் : இன்று மிதமான நாளாக அமையும் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உத்தியோக வேலையில் தவறு ஏற்படலாம் அதனால் கவனத்துடன் செயல்படுங்கள். காதலுக்கு இன்று ஏற்ற நாள் இல்லை. பணவரவு மிதமாக அமையும். உங்களுடைய உடல் இன்று சுமாரான ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மீனம் : உங்கள் முடிவுகளை நீங்கள் செயல்படுத்துவதில் நேர்மையுடன் இருங்கள். உத்தியோக இடங்களில் வீட்டு பிரச்சனைகள் பாதிக்காதவாறு நடந்து கொள்ளுங்கள். இன்று கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

Published by
Sharmi

Recent Posts

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

26 minutes ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

57 minutes ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

1 hour ago

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!

சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…

2 hours ago

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

3 hours ago

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

3 hours ago