இன்று(23.03.2022) இந்திய இளைஞர்களின் நாயகன் பகத்சிங் மறைந்த தினம்..!
இந்திய இளைஞர்களின் நாயகன் பகத்சிங் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட்ட தினம் வரலாற்றில் இன்று. இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக வளர்த்த வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம் 28ஆம் நாள் 1907-ம் ஆண்டு, பாங்காவில் பிறந்தார். 24 வயது இளைஞரான பகத் சிங்கை கைது செய்த பிரிட்டிஷ் அரசு, 63 நாட்கள் சிறைத் தண்டனைக்கு பிறகு அந்த இளம் வீரரை மார்ச் 23, 1931-ம் ஆண்டு தூக்கிலிட்டது.
இவர், சிறையில் இருக்கும் போது இந்திய கைதிகளுக்கு சம உரிமை பெற, சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தையும் பகத் சிங் முன்னெடுத்து மக்கள் மனதில் பிரபலமானார் பகத்சிங். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இளம் வீரர் பகத் சிங், சுதந்திர இந்தியாவை பார்க்கும் முன்னரே உயிர் துறந்தார். எனினும் பகத் சிங்கின் உயிரிழப்பு, இந்திய இளைஞர்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை மேலும் வளர்த்து, சுதந்திரத்தை பெற்று தந்தது. இன்றளவும் பகத்சிங் இளைஞர்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகவே வலம் வருகிறார்.