மேஷம் : இன்று சாதகமான நாள் கிடையாதென்பதால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்களது உத்தியோக வேலையில் சற்று பணிச்சுமை அதிகமாக தெரியும். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம் : இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். உத்தியோக பணிகளில் சிறப்பாக பணியாற்றி கவனத்தை ஈர்ப்பீர்கள். காதலுக்கு இன்று ஏற்ற நாள். பணவரவு அதிகமாக ஏற்படும். உங்களது தைரியமான மனநிலையால் இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
மிதுனம் : இன்றைய தினம் சற்று சுமாராக தான் இருக்கும். அதனால் அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. செலவினங்கள் காரணத்தால் கடன் வாங்க நேரலாம். ஆரோக்கியம் சிறப்பாக அமையாது. காலில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை என்பதால் முயற்சியில் தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய உத்தியோக பணிகள் அதிகமாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்பதால் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. உடல் ஆரோக்கியம் அதிக பதட்டம் காரணமாக பாதிக்க வாய்ப்புள்ளது.
சிம்மம் : இன்று அவசர முடிவுகளால் மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழக்க நேரிடலாம், அதனால் அறிவும் திறமையும் சேர்ந்து செயல்படுவது அவசியம். உங்களது உத்தியோக வேலை இன்று சவால்கள் நிறைந்ததாக அமையலாம். இதனால் வேலை இழக்கும் வாய்ப்பும் உண்டு என்பதால் பொறுமையோடு நடப்பது அவசியமானதாகும். கவனமின்மையால் பணம் இழக்க நேரலாம். முதுகு வலி தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.
கன்னி : இன்று உங்களின் கடின உழைப்பால் வெற்றியை அடையும் வாய்ப்பு உண்டு. வேலைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் செயல்திறனால் உற்சாகமாக இன்று காணப்படுவீர்கள். உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்றைய நாளில் பணவரவு மிகுந்து காணப்படும். ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும்.
துலாம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக காணப்படும். அதனால் இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உத்தியோக வேலை இன்று சிறப்பாக அமையும். இன்று காதலுக்கு ஏற்ற நாள். பணவரவு மிகுந்து காணப்படும். இன்று உடல் ஆரோக்கியத்துடன் காணப்படும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு வெறுமையான உணர்வு ஏற்படும், அதனால் பொறுமை மிகவும் அவசியம். பணியில் கடின உழைப்பு மூலம் வெற்றி பெறலாம். இன்று குடும்பத்தார்களிடம் சகஜமாக நடந்து கொள்வது மூலம் மகிழ்ச்சி பெறுவீர்கள். பணவரவு குறைவாக ஏற்படும். கால் வலி பிரச்சனை ஏற்படலாம்.
தனுசு : இன்று நீங்கள் குழப்பமாக இருப்பீர்கள். அதனால் இன்றைய நாள் சவாலாக தெரியும். உத்தியோக வேலையின் சுமை சற்று அதிகமாக இருக்கும். பணவரவு ஏற்ற தாழ்வுடன் இருக்கும். சளி, இருமல் தொல்லை ஏற்படலாம்.
மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோக பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவை இன்று சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம் : இன்று நீங்கள் குறைந்த அளவில் உள்ள முயற்சியிலேயே அதிக அளவுள்ள வெற்றியை பெற இயலும். உத்தியோக வேலையில் வளர்ச்சி காண்பீர்கள். காதலுக்கு இன்று ஏற்ற நாள். பணவரவு திருப்திகரமாக அமையும். உங்களுடைய உடல் இன்று ஆரோக்கியத்துடன் இருக்கும்.
மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. உங்கள் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். உத்தியோக பணி இறுக்கமாக அமையும். குடும்பத்தில் பேசுவதை சகஜமாக எடுத்துக்கொள்ளுங்கள் இல்லையேல் பிரச்சனை ஏற்படலாம். இன்று கூடுதல் செலவினங்கள் ஏற்படும். குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்த்து கொள்ளுங்கள். இல்லையேல் சளி தொல்லை ஏற்படும்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…