இன்றைய (22.01.2022) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். உத்தியோகத்தில் கடினமாக உழைத்தால் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.
மிதுனம் : இன்று உங்களுக்கு தடைகள் நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண செலவு அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்றைய தினம் நேர்மறை சிந்தனையை அதிகரிக்க வேண்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பண வரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்றைய நாள் மற்றவர்களிடம் பேசும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். மனைவியிடம் தவறான புரிந்துணர்வு ஏற்படும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படலாம்.
துலாம் : இன்றைய நாள் மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். மனஉளைச்சல் காரணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பழகுங்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு : இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் : இன்று உங்களது தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது அதனால் கவனம் தேவை. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று சற்று நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.