உங்களுக்கான இன்றைய நாள் எப்படி… இதோ இன்றைய (19.10.2020)ராசி பலன்கள்…
மேஷம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குழப்பம் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்: புதிய பாதை புலப்படும் நண்பர்கள் நம்பிக்கை அளிப்பர். வரன்கள் வாயில் தேடி வரும். அயல் நாட்டு நண்பர்கள் அனுகூலத் தகவல் கொண்டு வருவர்.
மிதுனம்: எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். காதினிக்கும் செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும்
கடகம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் கொள்வீர்கள். கடமை உணர்வோடு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்: மாபெரும் மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.
கன்னி: உள்ளன்பு மிக்க நண்பர்களின் ஆதரவு கிடைத்கும். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வழக்கு சாதகமாகமுடியும்.
துலாம்: பொருளாதார நிலை உயரும் நாள். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சகம்:பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும்.
தனுசு:நல்ல நிகழ்வுகள் நடைபெறும் நாள். பொருளாதார முன்னேற்றம் மேன்மையடையும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வரும்.
மகரம்:பணவரவு திருப்தியளிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் காண உதவிய சிலரை சந்திப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
கும்பம்: சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும். மாலைக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
மீனம்: நிலவிய குழப்பங்கள் அகலும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.பிடிக்காத உணவை உட்கொள்வதை தவிர்கலாம்.