இன்றைய (19.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் இலட்சியங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள். உங்களின் திறமையான செயல்பாட்டிற்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்: இன்று உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பயணங்கள் ஏற்படலாம். உங்கள் திறமையான தவகல் தொடர்பு மூலம் நற்பலன்களைப் பெறலாம். இன்று பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: உங்கள் பணிகளை முடிப்பதை சற்று கடினமாக உணர்வீர்கள். யதார்த்த அணுகுமுறையை கையாள வேண்டும். செயல்களின் விளைவுகள் சிறப்பாக அமைவதற்கு அமைதியாக யோசித்து செயல்படவும்.

கடகம் : இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். பொறுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நல்ல விளைவுகளைக் காண திட்டமிடல் வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.

சிம்மம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.பல விஷயங்களை சாதிப்பதற்கு இன்று உகந்த நாள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள்.

கன்னி: இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று கடினமான சூழல் காணப்படும். நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.

துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு சரியான செயலுக்கும் தவறான செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிய படிப்பினையை அளிக்கும். உங்களுடைய இலக்குகளை இன்று சரியாக திட்டமிட வேண்டியது அவசியம்.

விருச்சிகம்: இன்று துடிப்பான நாளாக இருக்காது.உற்சாகம் குறைந்து காணப்படும். மனதில் குழப்பங்கள் காணப்படும். இன்று எடுக்கும் முடிவுகள் சீரற்றதாக இருக்கும். அதிகப் பணிகள் காரணமாக இன்று நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள்.

தனுசு: இன்று புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது. பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் பணிக்கான பலன் கிடைக்கும்.

மகரம்: இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வது சிறந்தது.

கும்பம்: உங்கள் அன்றாடப் பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை. இன்று ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைவதில் பல தடைகள் காணப்படும். கவலைகளை ஒதுக்கிவிட்டு அமைதியாக இருங்கள். பணியிடத்தில் தடைகள் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel