இன்றைய (18.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:
இன்று உற்சாகமான நாளாக இருக்காது. பலன்கள் குறைந்து காணப்படும். குழப்பங்கள் காணப்படும்.
ரிஷபம்:
இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்களின் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு வழி காட்டும்.
மிதுனம்:
இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள்.
கடகம் :
இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். தைரியம் மற்றும் உறுதி மூலம் நன்மை விளையும். பயணம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
சிம்மம்:
நீங்கள் இன்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும்.
கன்னி:
இன்று சற்று அனுகூலம் குறைந்த நாள். உற்சாகம் குறைந்து காணப்படும். இன்றைய நாளை கையாள்வது கடினமாக இருக்கும்.
துலாம்:
இன்று அனுகூலமான நாளாக இருக்கும். விருந்தினர்களின் வருகை உற்சாகம் அளிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
விருச்சிகம்:
இன்று திருப்திகரமான நாளாக இருக்காது. இன்று பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனை சமாளிக்க நம்பிக்கையுடன் முயல வேண்டும்.
தனுசு:
இன்று பொறுமையான சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளர்ச்சி கிடைக்கும்.
மகரம்:
நீங்கள் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கைவளரும்.
கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
மீனம்:
இன்று சுமாரான நாளாக இருக்கும். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் சில குறைபாடுகளைக் காண்பீர்கள். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.