இன்றைய (18.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: உங்கள் லட்சியங்களை பூர்த்தி செய்துகொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள்.
ரிஷபம்: இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும் நாள். சூழ்நிலைகள் உங்கள் வெற்றிக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருப்பீர்கள்.
மிதுனம்: இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. இன்று சில எதிர்பாராத நன்மைகள் நடக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். திறமையாகப் பணியாற்றுவதற்கு இன்று பொறுமை அவசியம்.
கடகம் : இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். முக்கிய முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுவது சிறந்தது. சிறந்த இசையைக் கேட்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும்.
சிம்மம்: இன்று உங்கள் வளர்ச்சிக்கு சாதகமான நாள். இன்று செயல்கள் அனைத்தும் சுமூகமாக நடக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை பயக்கும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இன்றைய நாள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கன்னி: இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று கடினமான சூழல் காணப்படும். நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.
துலாம்: இன்று எதிர்பார்த்த பலன் கிட்டாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பிரார்த்தனை மற்றும் ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும். உங்கள் பணிகளைக் கையாளும் போது பொறுமை தேவை.
விருச்சிகம்: உங்கள் இலக்குகளை அடைவதில் இன்று தாமதம் ஏற்படும். எனவே உங்கள் இலக்குகளை சிறப்பாக திட்டமிட வேண்டியது அவசியம். இன்று சில மாற்றங்கள் ஏற்படும். அனால் அவை முழு அளவில் நன்மை அளிக்காது.
தனுசு: இன்று பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
மகரம்: இன்று மகிழ்ச்சியான உற்சாகமான தருணங்கள் காணப்படும். உங்கள் சுய முயற்சி மூலம் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். இன்று வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும்.
கும்பம்: இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. எதிர்காலம் குறித்த கவலையும் பயமும் காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் சிறந்த பலன் தரும். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது.
மீனம்: இன்றைய சூழல் அதிருப்தியை அளிக்கும். அதிகமான சிந்தனையை தவிர்க்க வேண்டும். சமநிலையோடு இருக்க வேண்டும். உங்கள் மேலதிகாரிகளுடன் விரும்பத்தகாத சூழல் காணப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025