இன்றைய (18.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுப்பீர்கள்.

ரிஷபம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. தவறான விளைவுகள் ஏற்படாமல் இருக்க எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும். பிறரோடு உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

மிதுனம்: இன்று தடைகள் நிறைந்து காணப்படும். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். கடினமான சூழ்நிலை இருந்தாலும் அதனை லேசாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். வெறுமையை உணர்வீர்கள்.

கடகம் : இன்று ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். நண்பர்களால் பயன் அடைந்து மகிழ்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள்.பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். 

சிம்மம்: இன்று அமைதியின்மை காணப்படும். இன்றைய செயல்களை நன்றாக சிந்தித்து கவனமுடன் முடிவெடுத்து செய்ய வேண்டும். இன்றைய சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

கன்னி: மோதல்களைத் தவிர்க்க அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் கவனமாகப் பழக வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது கவனம் தேவை. பணியிடச்சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது.

துலாம்: இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணத்தோடு இருந்தால் இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம்.பணியில் ஏமாற்றமான சூழ்நிலை காணப்படும். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்காது.

விருச்சிகம்:இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் சமயோசித புத்தியால் இன்றைய நாளை உற்சாகமாக்குவீர்கள்.

தனுசு: இன்று அனைத்தும் சுமுகமாக நடக்கும். உங்கள் சொந்த முடிவுகளை எடுப்பதில் இன்று உறுதியாக இருப்பீர்கள். உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பணிச்சூழல் சிறப்பாக காணப்படும்.

மகரம்: இன்று உங்களுக்கு மன உளைச்சல் காணப்படும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும் . பிரச்சினைளைக் கையாள்வதற்கு இது உதவும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

கும்பம்: நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். இன்று நற்பலன் காண உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சிக்கான பாதையில் தடைகளை சந்திக்க நேரும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.

மீனம்: இன்று தன்னம்பிக்கையுடன் கானப்படுவிர்கள். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.வேலை தொடர்பான பயணம் காணப்படும். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்