இன்றைய நாள் எப்படி இருக்கு?? (17/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!
மேஷம்:வரன்கள் வாயில் தேடி வருகின்ற நாள். வருமானம் திருப்தி தரும்.எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடு எடுப்பீர்கள். அன்போடுவர் மனக்குழப்பத்தை அகற்றுவார்.
ரிஷபம்: தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். மறக்க முடியாத சம்பவம் நடைபெறும். நினைத்த காரியம் குறைந்த செலவில் முடிவடையும்.
மிதுனம்: தடைகளை எல்லாம் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். தனவரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். சொத்துத் தகராறுகள் அகலும்.திடீர் பயணம் மனமகிழ்ச்சி தரும்.
கடகம்: திட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். கூறும் வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்புக் கொடுப்பர். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். பெற்றோர்களின் ஒத்துழப்போடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்: உத்தியோகத்தில் தொடர்பான தொல்லை அகலும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதிப்பீர்கள். நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கன்னி: எதிர்பாராத வரவு இதயத்தை மகிழ்விக்கும் நாள். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிடைக்கும்.சொந்த, பந்தங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்..
துலாம்: மனஉறுதியுடன் செயல்படும் நாள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதால் நன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. விலகிச் சென்றர்கள் மீண்டும் வந்திணைவர்..
விருச்சகம்:புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நாள். புகழ்மிக்கவர்களோடு தொடர்பு கிடைக்கும். அலைப்பேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
தனுசு: வீண் பழிகள் அகலும் எல்லாம் நாள். அயல் நாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலமானத் தகவல் வந்து சேரும். உத்தியோக முயற்சி கைகூடும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்: ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீடு கட்டும் முயற்சிக்கு உற்றத்துணையாக நண்பர்கள் இருப்பர். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கும்பம்: நண்பர்கள் நல்ல தகவலைக்கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பக்கத்து வீட்டார் ஏற்பட்ட பகை மாறும்.
மீனம்: மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படுங்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள் சிக்கனத்தை கடைபிடியுங்கள்.