இன்றைய (17.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இது ஏற்ற நாள். இன்று வெற்றியும் வளர்ச்சியும் காணப்படுகின்றது. இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் மன நிலையில் இருப்பீர்கள்.

ரிஷபம்: இன்று மிகவும் அனுகூலமான நாள். உங்கள் லட்சியங்களை அடைவதற்கான அதிர்ஷ்டம் இன்று காணப்படுகின்றது. உங்களின் உற்சாகமான போக்கினால் இன்று வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: இன்று ஆக்கப்பூர்வமான நாளாக அமையாது. சிறிய பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்று தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும். உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.

கடகம் : இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி காண விழிப்புடனும் கவனமுடனும் இருக்க வேண்டும். யதார்த்தமான அணுகுமுறை தேவை. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்: உங்களிடம் இன்று நம்பிக்கை நிறைந்திருக்கும். சிறந்த முடிவெடுக்கத்தக்க வகையில் உங்கள் மனநிலை சமநிலையில் இருக்கும். நீங்கள் உங்கள் உறுதியான மனநிலை காரணமாக பணியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள்.

கன்னி: உங்களிற்கு இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. இன்று சரியான முடிவெடுக்க மனதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். நெருக்கமானவர்களுடன் உரையாடும்போது கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்: இன்று உங்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும்.இதனை தவிர்க்க வேண்டும். மனதில் தெளிவு ஏற்பட நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். பணியிடத்தில் குழப்பம் காரணமாக உங்கள் பணியில் தாமதங்கள் ஏற்படும். சக பணியாளர்கள் அதற்கு காரணமாக அமைவார்கள்.

விருச்சிகம்: தினசரி நீங்கள் செய்யும் செயல்களை ஒழுங்கு முறையுடன் ஆற்ற வேண்டும்.ஆன்மீக செயல், தியானங்களுக்கு நேரம் ஒதுக்க முயன்றால் பலன் கிடைக்கும். உங்கள் பணியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் உங்கள் முன் இருக்கும் சவாலான சூழ்நிலைகளை கையாள முடியும். இன்று பணியில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்: இன்றயை நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய நீங்கள் உங்கள் செயல்களை சுமூகமாக ஆற்ற வேண்டும். இதன் மூலம் வாழ்வின் நன்மை தீமைகளை அறிய இயலும். உங்கள் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுவீர்கள்.

கும்பம்: இன்று சற்றே அனுகூலம் குறைந்து காணப்படும். உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் தன்னம்பிக்கை இழக்காமல் இருக்க முடியும். சம்பவங்களை லேசாகவும் நகைச்சுவை உணர்வுடனும் எற்றுக் கொள்ள வேண்டும்.

மீனம்: இன்று பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் கலந்து கொண்டு உங்கள் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்