இன்றைய (16.5.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்: இன்று சாதகமான நாளாக அமையாது.உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர்களின் மறைமுகமான எதிரப்புகள் காணப்படும். உரையாடும் போது கவனம் தேவை.
ரிஷபம்: இன்று வளர்ச்சிக்கு உகந்த நாள்.இன்றைய நாளை சரியாக திட்டமிட்டால் நீங்கள்வெற்றி பெறலாம். உங்கள் அணுகுமுறையில் இன்று உறுதியுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம்: நீங்கள் வெளிப்படையாகவும் விஷயங்களை லேசாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அனுசரனையான போக்கை மேற்கொள்ள வேண்டும்.அமைதியாக இருங்கள்.
கடகம் : இன்று பொறுப்புகளும் பதட்டமும் காணப்படுவதால் பக்தியுடன் ஸ்லோகம் சொல்வதன் மூலம் நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும்.
சிம்மம்: இன்று உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இருக்க வேண்டும்.கவலைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம். எப்பொழுதும் நல்லதையே நினைக்க வேண்டும்.
கன்னி: இன்று உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.பிறரிடம் உரையாடும் போது கவனித்து உரையாட வேண்டும்.
துலாம்: இன்று புதிய தொடர்புகள் ஏற்படும்.அவர்களின் ஆதரவு கிடைக்கும்.இன்று முழவதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.உங்கள் சாதனைகள் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்: உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆனால் மெதுவாகத் தான் கிடைக்கும்.உங்கள் கடின உழைப்பை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும். முக்கியமான செயல்கள் செய்வதை இன்று தவிர்க்கவும்.
தனுசு: இன்று முழுவதும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும்.முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மகரம்: இன்று உங்களுக்கு சிறந்த நாள்.உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். நீங்கள் மிகவும் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
கும்பம்: வேறு எந்த நாளையும் விட இன்று நீங்கள் வெற்றி காண்பீர்கள்.உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும். சுய முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
மீனம்: விரைவான திடீர் முடிவுகளை இன்று எடுக்காதீர்கள். யோசித்து அதற்கேற்றாற் போல செயல்படவேண்டும். உங்கள் எண்ணத்திலும் செயலிலும் பக்குவம் தேவை.