இன்றைய (15.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: நீங்கள் இன்று கோவில் விழாக்களில் பங்கு கொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் திருப்தி கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

ரிஷபம்: இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆற்ற வேண்டிய செயல்கள் அதிகமாக இருக்கும். அதிக முயற்சியின்றி உங்கள் இலக்குகளை அடைவீர்கள். பரந்த நோக்குடன் இருப்பீர்கள். புதிய கருத்துகளை கொண்டிருப்பீர்கள்.

மிதுனம்: இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. வெற்றியை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்துக் கொள்வது சிறந்தது. இன்று அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். பணியில் யதார்த்தமான அணுகுமுறை வெற்றியை அளிக்கும்.

கடகம் : இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. இன்று உங்கள் அணுகுமுறையில் உறுதி மிகவும் அவசியம்.பணிச்சூழல் திருப்திகரமாக இருக்காது. இன்று காணப்படும் பணி இறுக்கம் உங்களை கவலைக்குள்ளாக்கும்.

சிம்மம்: இன்று ஆக்கபூர்வமான பலன்கள் கிடைக்காது. இதனால் தன்னம்பிக்கையும் உறுதியும் இழந்து காணப்படுவீர்கள். மாற்றங்களும் பயணங்களும் காணப்படும். இன்று உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி: இன்றைய நாள் வரவேற்கத்தக்கதாக இருக்காது. சில சமயங்களில் பொறுமை இழப்பீர்கள். உணர்ச்சி வசப்ப்டுவீர்கள். அந்தச் சமயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.

துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது. இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. இன்று எதையும் எதிர்பார்க்காதீர்கள்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.

தனுசு: ஆன்மீக நாட்டம் வளர்ச்சியையும் ஆறுதலையும் தரும். இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்க புது வழிகள் காண்பீர்கள். அவசர முடிவுகள் எதையும் எடுக்காதீர்கள். அதனால் எந்தப் பயனும் கிடைக்காது.

மகரம்: இன்று சிறப்பான நாள். இன்று சுறுசுறுப்புடனும் மும்மரமாகவும் காணப்படுவீர்கள். இன்று நற்பலன்கள் கிடைக்கும்.பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்: இன்று ஆன்மீக அணுகுமுறையை நீங்கள் பற்றிக்கொள்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கையால் சாதனை புரிவீர்கள். இன்று அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் நாள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீனம்: நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் அளவிற்கு இன்றைய தினம் சாதகமாக இருக்காது. மனக்குழப்பத்திற்கு ஆளாக நேரலாம். பதட்டப்படாமல் இன்றைய பணிகளை திட்டமிடுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்