இன்றைய (13.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று நீங்கள் உங்களின் அறிவுத்திறனை இழக்க நேரும். உங்கள் பேச்சில் பதட்டமும் வேதனையும் பிரதிபலிக்கும். பிரார்த்தனை நல்ல பலனைத்தரும்.

ரிஷபம்: இன்றைய நாளில் மோசமான சூழ்நிலை காணப்படும். அவற்றை சமாளிப்பதற்கு போதுமான தைரியம் இழந்து காணப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். அதை மாற்றி நேர்மறையாக்குங்கள்.

மிதுனம்: இன்று வளர்ச்சிக்கு சாதகமான நாளாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இன்று மனதை அமைதியாகவும் சமநிலையுடனும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கடகம் : இன்றைய நாள் நீங்கள்விரைந்து முடிவெடுப்பதற்கு சாதகமாக அமையும். உங்களின் உறுதியான மற்றும் தைரியமான மனநிலை மற்றும் அதனுடன் சேர்ந்த உங்கள் திறமை காரணமாக உங்கள் இலட்சியத்தில் நீங்கள்வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்: இன்று அழுத்தமான சூழ்நிலைகளும் வெற்றிக்கு குறைந்த வாய்ப்புகளும் காணப்படுகின்றன. தினசரி அலுவல்களை எச்சரிக்கையான அணுகுமுறையுடன் கையாளவும்.

கன்னி: இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். தினசரி செயல்களை மேற்கொள்வதும் கூட இன்று கடினமாக இருக்கும். களிப்பான அணுகுமுறையை பராமரிப்பத்ன மூலம் இன்று நற்பலன்களைக் காணலாம்.

துலாம்: இன்று யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படக் கூடாது. அமைதியாக இருந்தால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். வெளியிடங்களுக்குச் செல்வது ஆறுதலை அளிக்கும.

விருச்சிகம்:உறுதியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டு இன்று செயல்களில் வெற்றி கண்டு மகிழ்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள்.

தனுசு: முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுவதற்கு உகந்த நாள். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அமைதியும் ஆறுதலும் கிடைக்கும்.உங்கள் பணிவளர்ச்சியில் தடைகள் காணப்படும்.

மகரம்: இன்று அறிவுப்பூர்வமான அணுகுமுறையுடன் விஷயங்களை கையாள வேண்டும். வெற்றி அடைவதற்கு நீங்கள் கடினமான முயற்சியுடன் போராட வேண்டும்.உங்கள் செயல்திறன் முலம் பணியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்பம்: உங்கள் நலன்களை ஊக்குவிக்கும் விஷயங்களில் முடிவெடுப்பதற்கு இன்று உகந்த நாள். இன்று நீங்கள் நிறைவான திருப்தியுடன் காணப்படுவீர்கள்.உங்கள் செயல்திறன் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

மீனம்: இன்று முன்னேற்றமான பலன்கள் காணப்படும். உங்களுடைய உறுதியான முயற்சியினால் நீங்கள் மேற்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மனஆற்றலும் நேர்மறையான எண்ணங்களும் இருந்தால் வெற்றி கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records