இன்றைய (12.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் இல்லை. உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை காணப்படுவதால் அதனை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் அகந்தையான போக்குடன் பேச நேரும், இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று பண இழப்பு நேரலாம். பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படலாம்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணத்தை சேமிக்க அதிக வாய்ப்பிருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் திகழ்வீர்கள்.

மிதுனம் : இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். நல்ல மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் இன்று நல்ல புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள்.  பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு பதட்டமான நாள் என்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். இன்று உத்தியோக இடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரும். சகப்பணியாளர்களிடம் கவனமாக இருக்கவும். உங்களது மனைவியிடத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகமாக காணப்படும். கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் இன்று சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட நேரும். குடும்ப நண்பர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கலாம்.

கன்னி : இன்றைய நாளில் உற்சாகமாக நீங்கள் காணப்படுவீர்கள். இன்று புதிய நண்பர்கள் பெறுவீர்கள். உத்தியோக வேலையில் சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவுகள் அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான அமையும். உத்தியோக இடத்தில் சாதகமான சூழ்நிலை அமையும். இன்று உங்கள் மனைவியுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. அதனால் கவனத்துடன் செயல்படுங்கள். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பண வரவு சற்று குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்காது.

தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய ஏற்ற நாள். சாதகமான சூழ்நிலை அமைந்துள்ளது. உத்தியோக வேலையில் சற்று கவனம் தேவை. இன்று நீங்கள் குடும்பத்தில் நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.

மகரம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகாரமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோக இடங்களில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வரவுகள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். உத்தியோக வேலை சற்று அதிகமாக அமையும். உங்கள் துணையுடன் மோதல் காணப்படும்.  பண வரவு அதிகமாக இருக்காது. கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண வரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

Published by
Sharmi

Recent Posts

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

7 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

8 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

9 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

9 hours ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

10 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

11 hours ago