இன்றைய (10.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று உங்களுக்கு மறக்க முடியாத நாள். உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியைத் தரும்.உங்களுக்குள் காணப்படும் திறமைகளை பயன்படுத்தி உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.

ரிஷபம்: இன்று சில சவால்களை சந்திக்க நேரும். வெற்றி கிடைப்பதற்கு உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் தேவை. ஆன்மீக ஈடுபாடு உதவிகரமாக இருக்கும். அதனை எப்படி சமாளிப்பது என்று உணர்ந்து சமாளிக்க வேண்டும்.

மிதுனம்: இன்று பொறுமையாக இருக்க வேண்டும். சமயோசிதமாக செயல்பட வேண்டும். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் சக பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும்.

கடகம் : வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனம் திசை திரும்பலாம். வாழ்க்கையில் யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள தெரிந்து கொள்ளுங்கள். பணியிடத்தில் நற்பெயரை எடுப்பீர்கள்.

சிம்மம்: இன்று சிறந்த நாளாக இருக்கும். நட்பான அணுகுமுறை தேவை. அது வாழ்க்கையின் நன்மைகளையும் தீமைகளையும் உணர வைக்கும். உங்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவைக் கொண்டிருப்பீர்கள்.

கன்னி: இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். உங்களுக்கென ஒரு சிறப்பு அம்சத்தை உருவாக்கிக்கொண்டு முன்னேறுவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட வேண்டும்.

துலாம்: கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ளலாம். பிரார்த்தனை சிறந்த பலனைத் தரும். வேலையில் காணப்படும் சுமை காரணமாக பதட்டமாக உணர்வீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது.

விருச்சிகம்: உங்கள் நாளை திட்டமிட வேண்டும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவீர்கள். உங்களின் யாதார்த்தமான அணுகுமுறை அதற்கு உதவும்.

தனுசு: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய தொடர்புகள் உருவாகும். அவை உதவிகரமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.

மகரம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுடைய இனிமையான பேச்சின் மூலம் பிறரைக் கவர்வீர்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்கள் ஏற்படும். 

கும்பம்: இன்று உங்களுக்கு மறக்க முடியாத நாள். உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்குள் காணப்படும் திறமைகளை பயன்படுத்தி உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.

மீனம்: உங்களுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்காது. உங்கள் தினசரி செயல்களை செய்வதை கடினமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live rn ravi
Former CSK player Suresh Raina
KRR vs GT - IPL 2025
Pope Francis died
Counterfeit 500 rupee note
Nagercoil Court - Killiyur MLA Rajesh Kumar
ma subramanian tn assembly