இன்றைய (10.04.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்: இன்று அதிக பயணங்கள் காணப்படும். எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.கவனக் குறைவு காரணமாக பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பயனுள்ள உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
ரிஷபம்: இன்று சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் சொத்து உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.உங்கள் முயற்சிக்கான பாராட்டு பெறுவீர்கள்.
மிதுனம்: இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்களின் இனிமையான தகவல் தொடர்பின் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள். நீங்கள் உங்கள் பனியின் இயல்பை விரிவுபடுத்தலாம்.
கடகம்: ஏழைகளுக்கு உணவு அளித்தல் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மூலம் நன்மை பெறலாம். பணி சம்பந்தமான முக்கிய செயல்களில் தாமதங்களை எதிர்கொள்ள நேரும்.
சிம்மம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும். அகந்தை ப் போக்கின் காரணமாக உறவில் பாதிப்பு ஏற்படும். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி: இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை உருவாக்கிக்கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி காணப்படும். ஆன்மீக விஷயங்களுக்கு செலவு செய்வது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.
துலாம்: உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்ற நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் கடன் வாங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையேகருத்து வேறுபாடு காணப்படும்.
விருச்சிகம்: உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களிடையே மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகள் கவலையை ஏற்படுத்தும். எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்க்கவும்.
தனுசு: இன்றைய நாளை இசை கேட்பது, தொண்டு செய்வது, தன தருமங்கள் செய்வது போன்ற ஆன்மீக காரியங்களுக்கு பயன்படுத்துங்கள்.இன்று பண வரவு செலவு இரண்டும் காணப்பட்டாலும் செலவு அதிகமாக இருக்கும்.
மகரம்: நீங்கள் பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம்.தொழில் செய்பவர்கள் மிதமான பலன்களை காண்பார்கள்.சேமிப்பதற்கான வாய்ப்பும் இன்று குறைவு. தோள் வலி மற்றும் சளி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்: உங்கள் தவகல் தொடர்பு திறமை மூலம் சிறந்த பலன்களைக் காணலாம். சக பணியாளர் களுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.
மீனம்: உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் சில விஷயங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.பணியில் சிறப்பாக செயலாற்ற வேண்டியது அவசியம்.குடும்ப உறுப் பினர்களுடன் அதிக நேரம் செலவு செய்வதனால் அவர்களும் உங்கள் துணையும் மகிழ்ச்சி அடைவார்கள்.