இன்றைய (11.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று நீங்கள் அமைதியுடன் ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டிய நாள். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உங்கள் பிரியமானவர்களிடம் சரியான முறையில் தகவலை பரிமாறத் தவறுவீர்கள்.
ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இல்லை. உங்கள் முயற்சியில் தாமதங்களை எதிர்கொள்வீர்கள். வெற்றி பெறுவதற்கு நல்ல திட்டமிடல் தேவை. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
மிதுனம்: பொறுமையின்மை மற்றும் உறுதியின்மை காரணமாக நீங்கள் முன்னேற இயலாது. இதனால் பதட்டமான சூழ்நிலை காணப்படும். இந்தச் சூழ்நிலையை சமாளிக்க உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.
கடகம் : இன்று நீங்கள் இலட்சியத்தை அடையும் ஆற்றலுடன் திகழ்வீர்கள். உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும. திறமையான தகவல் பரிமாற்றத்தின் மூலம் நீங்கள் மிகுந்த பலனடைவீர்கள்.
சிம்மம்: இன்று நீங்கள் வெறுமையையும் பாதுகாப்பாற்ற தன்மையையும் உணர்வீர்கள். எந்தவொரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.
கன்னி: உங்கள் முக்கியமான விஷயங்களைக் கூட இன்று சரியான நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படும். திரைப்படம் பார்ப்பதன் மூலம் அல்லது பாடல்களைக் கேட்பதன் மூலம் நீங்கள் நன்றாக உணர்வீர்கள்.
துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு முக்கியமான இலட்சியங்களை அடைவதற்கு நல்ல வாய்ப்புடன் கூடிய பிரகாசமான நாள். உங்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் நல்ல பலன்கள் கிட்டும்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்கு ஆழ்ந்த திருப்தியை உண்டாக்கும். இன்று ஆற்றல் நிறைந்து காணப்படுவீர்கள்.
தனுசு: இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. முடிவெடுப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்: இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். உங்கள் முயற்சிகளில்இன்று நீங்கள் பின் தங்கி இருப்பீர்கள்.
கும்பம்: இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். மனஉறுதி மூலம் இன்று நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் மற்றும் உறுதி நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்
மீனம்: இன்று உங்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை காரணமாக சிறிது அவநம்பிக்கையோடு காணப்படுவீர்கள். அதனால் இன்று சற்று பின்தங்கி யிருப்பீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025