இன்றைய (09.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்றைய நாள் நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவதனால் திருப்தி அடைவீர்கள். உத்தியோக பணியில் நல்ல பலன்கள் உண்டு. உங்கள் மனைவியிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாளில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகமாக வேலை இருக்கும். அதனால் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களது மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. கண் வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் : இன்றைய தினம் குழப்பமான நாளாக அமையும். அதனால் இன்று கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக வேலை காணப்படும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று உங்களுக்கு பல் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடகம் : இன்று உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கக்கூடிய நாள் என்பதால் புதிய முயற்சியில் ஈடுபடலாம். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்களது மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டகரமான பணவரவு காணப்படும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உங்களுக்கு ஆர்வத்தை கொடுக்கும் முக்கிய முடிவுகளை இன்று எடுப்பீர்கள். உத்தியோக வேலையில் எளிமையாக வேலையை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவிடத்தில் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. பதட்டம் காரணமாக சற்று எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோக வேலையில் அதிக பணியால் நேரம் செலவாகும். உங்கள் மனைவியிடம் அன்பாக பேசுங்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். தலைவலி போன்ற சிறு பாதிப்பு ஏற்படும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோக இடத்தில் கவனமாக பணிகளை செய்யுங்கள். இன்று உங்கள் மனைவியுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை இன்று மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் நீங்கள் சிறந்த பாராட்டை அடைவீர்கள். காதலுக்கு உகந்த நாள். உங்களுக்கு அதிகளவு பண வரவு கிட்டும். தைரியம் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். சற்று சவாலான சூழ்நிலை அமையும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை காணப்படும். இன்று நீங்கள் பொறுமையாக அனுசரித்து குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் : இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். அதனால் தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். உத்தியோக இடங்களில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி மற்றும் தொடை வலி காணப்படும்.
கும்பம் : இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். உத்தியோக வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணம் நஷ்டமடைய வாய்ப்புள்ளது. முதுகு விறைப்பு தன்மை மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும் என்பதால் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோக வேலையில் உங்களுக்கு வளர்ச்சி காணப்படும். உங்கள் மனைவியிடம் இனிமையான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது மகிழ்ச்சி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025